Kogilavani / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.புஸ்பராஜ்
'நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலில், 20 வீதமான பெண்களை தேர்தல் களத்தில் இறக்குவதற்கு கட்சி முடிவு செய்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணி தலைவியும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சரஸ்வதி சிவகுரு தெரிவித்துள்ளார்.
'ஏனைய அரசியல்வாதிகள் போன்று, மலையக பெண்களை அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்தாமல், பெண்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வகையிலேயே எமது கட்சி செயற்பட்டு வருகின்றது' என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
'பெண்களுக்கு தொடர்ச்சியாக தலைமைத்துவத்தை வழங்கும் பட்சத்திலே, பெண்கள் இந்நாட்டில் தலை நிமிர்ந்து வாழ முடியும். மலையகப் பெண்களுக்கு தலைமைத்துவம் வழங்கினால், அவர்கள் தமது பிரச்சினைகளை தாமாகவே தீர்த்துக்கொள்வார்கள். பெருந்தோட்ட பெண்கள் நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக இருந்துள்ளார்கள். தோட்ட நிர்வாகத்தின் கீழ் அடிமையாக செயற்பட்ட பெண்கள், இன்று சகல விடயங்களிலும் முன்நின்று செயற்படுபவர்களாக மாறியுள்ளனர்' என்றார்.
'மாகாண சபையில் போதியளவு நிதி இல்லை. சிறிய தொகையையே ஒதுக்கீடு செய்கிறார்கள். இந்நிதியை கொண்டு, பெண்கள் மத்தியில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியாதுள்ளது. ஆனாலும், எமது கட்சி பெண்களின் அபிவிருத்திக்காக தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது.
மார்ச் மாதம் நடைபெறவுள்ள மகளிர் தின விழாவை, பெண்களே தலைமைத்துவம் ஏற்று நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை காலமாக ஓரந்தள்ளப்பட்ட மலையக பெண்களின் வாழ்க்கையில் ஒரு விடிவு ஏற்படும். பெண்கள் அடிமை தனத்தை தகர்த்தெறிந்து, அரசியலிலும் ஏனைய துறைகளிலும் பிரவேசிக்க வேண்டும்' என அவர் கோரினார்.
8 minute ago
20 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
32 minute ago