2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

'வெற்றிடத்தை நிரப்புவதில் பாரிய அநீதி'

Kogilavani   / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸக்

மத்திய மாகாண சபையில் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிறப்புவதில், பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அநுர பெர்ணான்டோ தெரிவித்தார்.

கண்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,

“மத்திய மாகாண சபையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட உறுப்பினராக இருந்த கலாநிதி ஜகத் விஜேநாயக்கவின் மறைவுக்குப் பின்னர், அவரது இடத்துக்கு வெற்றிடம் ஏற்பட்டது.

இவ்வெற்றிடத்தை நிரப்புவதெனில், விருப்பு வாக்குப் பட்டியலில் அடுத்துள்ள நபரே நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். விருப்பு வாக்குப் பட்டியலில் அவருக்கு அடுத்த இடத்தில் நானே உள்ளேன். அதாவது, 19 ஆவது இடத்தில் நான் இருக்கின்றேன். ஆனால், 19 ஆவது இடத்திலுள்ள என்னைத் தெரிவு செய்யாது, 27 ஆவது இடத்திலுள்ள ஒருவரை, உறுப்பினராக நியமித்துள்ளனர். இது பாரிய அநீதியாகும்.

எனது தந்தையான ஏ.ஜீ.பெர்ணான்டோ, 1951ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுடன் இணைந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார். அவருக்குச் சொந்தமாக இருந்த அனைத்து சொத்துகளையும் அவர், கட்சிக்காக தியாகம் செய்தார். அவரது மறைவுக்குப் பின்னர், அவர் கட்டி எழுப்பிய கட்சியை, அவரது பிள்ளைகளான நாங்கள் பாதுகாத்தோம். நான் அரச வங்கியில் தொழில்புரிந்தேன். அரசியலில் ஈடுபட்டுள்ளதால், எனது அனைத்து பதவிகளும் இல்லாமல் போயின. இதுவே இன்று எனது நிலைப்பாடு.

கடந்த மாகாண சபைத்தேர்தலில், 19,000க்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்று நான், 19ஆவது இடத்துக்குத் தெரிவானேன். இருந்தபோதும், 27ஆம் இடத்தில் இருப்பவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது. இது பாரிய அநீதியாகும்” என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .