2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஊவா மாகாண சபையின் வரவுசெலவு திட்டம் 22 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Super User   / 2010 நவம்பர் 28 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

ஊவா மாகாண சபையின் 2011ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டம் 22 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ஊவா மாகாண சபையின் 2011ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த 27அம் திகதி வரை ஊவா மாகாண சபையில் இடம்பெற்றது.

இறுதி நாளான 27ஆம் திகதி மாலை ஏழு மணிக்கு 2011ஆம் ஆண்டிற்கான நிதி கணக்கீடு மாகாண சபை முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த நிதி அறிக்கை வாக்கெடுப்பிற்கு இடப்பட்டது. அதன்போது ஆதரவாக 23 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் வழங்கப்பட்டது.

ஜே.வி.பி உறுப்பினர் எதிராக வாக்களித்துடன் ஐ.தே.க 6 உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .