2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி மாணவர் அனுமதி 24ஆம் திகதிக்கு மாற்றம்

Super User   / 2011 ஜனவரி 04 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( எஸ்.சுவர்ணஸ்ரீ )

பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் இவ்வருடத்திற்கான புதிய மாணவர் அனுமதி எதிர்வரும் 17 ஆம் திகதி என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும்  தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறும் என  பீடாதிபதி ஏ.சுந்தரலிங்கம் தெரிவித்தார்.

இவ்வருடத்திற்காக அனுமதிக்கப்படவுள்ள 250 மாணவர்களின் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ள  90 பேருக்கான அழைப்புக் கடிதங்கள் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எனினும் இந்த மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள பிணை பத்திரம் செல்லுபடியற்றதாக்கியுள்ளதால் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்குப் புதியதொரு பிணைப்பத்திரம் அனுப்பி வைக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய பிணைப்பத்திரத்தினை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் எனறும் பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடபதிபதி மேலும் தெரிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரிக்கு அனுமதிக்கப்படுகின்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் 75 வீதமானோர் தமிழ் மாணவர்களும் 25 வீதமானோர் சிங்கள மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X