2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கண்டி மெதவலையில் 3 கோடி ரூபா செலவில் பஸ் தரிப்பிடம்

Kogilavani   / 2010 டிசெம்பர் 31 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி ஹாரிஸ்பத்துவ பிரதேச சபைக்குட்பட்ட மெதவலை நகரில் மூன்று கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் தரிப்பிடம் ஒன்றினை நிறுவ பிரதேச சபை தீர்மானித்துள்ளது.

நேற்று இதுதொடர்பில் இடம் பெற்ற பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த பிரதேசபையின் தலைவர் ஆனந்த ஜயவிலால் மெதவலை நகரில் நீண்ட காலமாக பஸ் தரிப்பிடம் இல்லாதது பெரும் குறையாக உள்ளது.  உள்ளுராட்சி சபைகள் களைப்பதற்கு முன் இதற்கான அடிக்கள் நாட்டும் விழாவை நடாத்தவுள்ளோம்.

பிரதேசசபை இதற்காக சுமார் மூன்று கோடி ரூபாய் செலவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக  ஏற்கெனவே 80 இலட்சம் ரூபா வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது என  அவர் கூறினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X