2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வட்டவளையில் 11 வயது சிறுவனைக்காணவில்லை : பொலிஸில் முறைப்பாடு

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 30 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

வட்டவளை கரோலினா ட்ரபர்ல்கார் தோட்டத்தைச் சேர்ந்த 11 வயதான சிறுவன் ஒருவன் நேற்று  29ஆம் திகதி முற்பகல் தொடக்கம் காணவில்லை என்று இந்தச் சிறுவனின் பெற்றோர் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பெரியசாமி பிரகலாதன் என்ற பெயரைக்கொண்ட இந்தச் சிறுவன் நேற்று முற்பகல் 11 மணியளவில் வட்டவளை நகருக்குச் சென்றுள்ளான். எனினும் இந்தச்சிறுவன் மாலையாகியும் வீட்டுக்குத் திரும்பாத காரணத்தினால் இந்தச் சிறுவனின் பெற்றோர் அவர்களின் உறவினர் வீடுகளில் தேடியுள்ளனர். எனினும் காணமால்போன சிறுவன் தொடர்பில் எந்தவிதமான தகவலும் கிடைக்காத காரணத்தினால் பெற்றோர் வட்டவளை பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

இந்தச்சிறுவன் இறுதியாக நீலநிற டிசேர்ட்டும் நீலநிற டெனிம் நீள காற்சட்டடையும் அணிந்திருந்ததாக சிறுவனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். குறித்த சிறுவன் தொடர்பான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் வட்டவளை பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X