2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தீ விபத்தினால் 22 குடும்பங்கள் இடம்பெயர்வு

Super User   / 2011 ஜனவரி 01 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(காந்தய சேனநாயக்க, எஸ்.தியாகு)

நுவரெலியா மாவட்டத்தின் கந்தப்பளையில்   வீடொன்றில் ஏற்பட்ட தீ பரவியதால் 22 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

 

மின்சார ஒழுக்கின் காரணமாக இன்று அதிகாலை 1.50 மணியளவில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரும் தீயணைப்புத் துறையினரும் இணைந்து தீயை அணைத்தனர். இடம்பயர்ந்த குடும்பங்கள் அயலிலுள்ள வீடுகளில் தங்கியுள்ளனர்.

இதேவேளை தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை  வீடுகளையும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X