2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 25ஆவது வருட பூர்த்தியையொட்டி மரதன் ஓட்டம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 29 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம். தாஹிர்)

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 25ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு பதுளையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று முதல் 31 திகதி வரை நடைபெறவுள்ளன. இவ் நிகழ்ச்சிகளின் ஆரம்பமாக மரதன் ஓட்டப்போட்டியொன்று இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

இதில் 25 போட்டியாளர்கள் பங்குகொண்டனர். முதலிடத்தை இலங்கை இராணுவத்தை சேர்ந்த கே.ஜி.ஆர்.சமன்குமார, இரண்டாம் இடத்தை ரி.எம்.வி.தென்னக்கோன், மூன்றாம் இடத்தை என்.எம்.சானக சதுரங்க, வெலிமடை மத்திய கல்லூரி மாணவனும் பெற்றுக்கொண்டனர்.

மரதன் ஓட்ட போட்டியை பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹன கீர்த்தி திஸாநாயக ஆரம்பித்து வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X