2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ரூ. 5 கோடிக்கு மேல் கொள்ளையடித்து பல கொலைகளை செய்த பாதாள உலக தலைவர் கைது

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 28 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கொழும்பில் சீனி முதலாளியென்று  அழைக்கப்பட்ட முருகேசு என்ற வர்த்தகரை 25 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்திற்காக கடத்தி சென்று கொலை செய்தது உட்பட பல கொலைகளை செய்து ஐந்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்த பாதாள உலகத் தலைவர் ஒருவரை அலவத்துகொடை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

முருகேசு முதலாளியை கொலை செய்ததைத் தவிர பேராதனை பூங்காவில் வைத்து வியாபாரி ஒருவரை இலட்சக்கணக்கான ரூபாய் கூலிக்காக கொலை செய்து மற்றும் பல கொலைகளைச் செய்ததுடன், கொலை முயற்சிகளையும் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இவர், கொழும்பில் பணப் பரிமாற்றம் செய்யும் இடமொன்றிலிருந்து இரண்டரை கோடி ரூபாவை துப்பாக்கிமுனையில் கொள்ளையடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொலை குற்றச்சாட்டின் பேரில் கொழும்புப் பிரதேச பொலிஸ் நிலையமொன்றில் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர், சில மாதங்களுக்கு முன் கூட்டின் கூரையை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்று ஒளிந்திருந்தபோதே பொலிஸார் கடந்த வாரம் மீண்டும் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம்  நேற்று கையளிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X