2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நாவலப்பிட்டி ஹோல்கம கிராமத்துக்கு ரூ. 50 இலட்சம் செலவில் மின்சாரம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 27 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நாவலப்பிட்டி தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட தோட்டங்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் தற்போது 97 வீத மின்சார விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

நாவலப்பிட்டி பிரதேசத்திலுள்ள ஹோல்கம கிராமத்துக்கான மின்சார விநியோகத் திட்டத்தை திறந்துவைத்து பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

50 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் வழங்கப்பட்டுள்ள இந்த மின்சார விநியோகத்திட்டத்தின் மூலமாக ஹோல்கம கிராமத்தை வசிப்பிடமாகக் கொண்ட மூவினத்தைச் சேர்ந்த 200 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன. அத்துடன், இந்தக் கிராமத்தில் கல்லுடைக்கும் தொழிலில் ஈடுபடுகின்ற குடும்பங்களும் இந்த மின்சார விநியோகத் திட்டத்தால் நன்மையடையவுள்ளன.

நாவலப்பிட்டி நகரமும் அதனைச்  சூழவுள்ள பகுதிகளும் தற்போது அபிவிருத்தி அடைந்து வருதால,; பிரதேச மக்கள் பல்வேறு நன்மைகளை பெறுகின்றனர் என்றார். இந்த மின்சார விநியோகத் திட்டத் திறப்பு விழாவில் பஸ்பாகே கோரளை பிரதேசசபைத் தலைவர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X