2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நோர்வூட் மாணவர்கள் 60பேருக்கு வைரஸ் காய்ச்சல்;வைத்தியசாலையில் அனுமதிப்பு

Super User   / 2010 நவம்பர் 25 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட நோர்வூட் ஸ்டொக்கொம் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் தொற்றிக்கொண்டுள்ளதால் 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை இப்பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் சிலர் மயங்கிய நிலையில் இருந்தமையால் உடனடியாக இந்த மாணவர்கள் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று வியாழக்கிழமையும்  மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகார்யொருவர் தெரிவித்தார்.

கவிரவில, மாநெலி ,மாக்கொல ஆகிய தோட்டங்களை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் காரணமாக பாதிக்ப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தொடர்ந்து  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .