Gavitha / 2020 நவம்பர் 11 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
பூண்டுலோயாவில் இருந்து, கம்பளைக்கு நிறப்பூச்சிகளை ஏற்றிக்கொண்டு சென்ற லொறி, பூண்டுலோயா – கொத்மலை பிரதான வீதியின் பாளுவத்தை பகுதியில் வைத்து, சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த சாரதியும் லொறி நடத்துநரும், கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக, கம்பளை பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
லொறி சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக்கலக்கமே இந்த விபத்துக்குக் காரணம் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
39 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
1 hours ago