Janu / 2024 மே 26 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதையல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் ரூபாய் பதிமூன்றரை கோடி பெறுமதியான 14 மாணிக்கக் கற்களை விற்பனை செய்ய முற்பட்ட பெண் ஒருவர் உட்பட ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
குறித்த மாணிக்கக் கற்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, அதிகாரி ஒருவரை மாறுவேடத்தில் அனுப்பி, சந்தேக நபர்களை கட்டுகஸ்தோட்டை பழைய பாலத்திற்கு அருகில் வரவழைத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இதன்போது 14 மாணிக்கக் கற்கள் , டிஜிட்டல் தராசு ஒன்று மற்றும் சிறிய மின்விளக்கு ஆகியவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட நபர்கள், ஹினிதும, காலி, ஹெய்ந்துடுவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 35-49 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இந்நிலையில், இந்த மாணிக்கக் கற்கள் போலியானதாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் அவற்றைத் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025