2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

20 பாடசாலைகளின் 2011ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

Super User   / 2010 டிசெம்பர் 26 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

தேசத்திற்கு மகுடம் நிகழ்வு இடம்பெறும் காலப்பகுதியில் விடுமுறை வழங்குவதற்கு ஏதுவாக மொனராகலை மாவட்டத்திலுள்ள 20 பாடசாலைகளின் 2011ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன.

2011ஆம் ஆண்டுக்கான தேசத்திற்கு மகுடம் நிகழ்வு மொனராகலை புத்தல பிரதேசத்தில் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை, க.பொ.த.(சா/த) பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் நிலையங்களாக செயற்படும் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் 2011ஆம் ஆண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனவரி மாதம் 3ஆம் திகதியே ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
க.பொ.த.(சா/த) பரீட்சை மதிப்பீட்டு பணிகள் இம்மாதம் 31ஆம் திகதி முதல் ஜனவரி 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X