Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி மடவளை மதீனா தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று வியாழக்கிழமை காலை பாடசாலையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் விஜயசிரி ஹேரத் அங்கு உரையாற்றுகையில்,
உலகம் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மாறும் உலகமாற்றங்களை அறிந்து கொள்ளவேண்டுமாயின் எமக்கு அறிவு தேவை. அந்த அறிவை சகல மாணவர்களும் தேடிக் கற்றுக்கொள்ளவேண்டும். எமது கலாசாரத்தை பாதுகாத்துக்கொண்டால் அதுவே எமது பாரிய வெற்றியாக இருக்கும் என்றார்.
இவ்வைபவத்தில் ஆசிரிய மாணவர்கள் பலர் கௌரவிக்கப்பட்டனர். வத்துகாமம் வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி சந்திரிக்கா மாயாதுன்ன, மத்திய மாகாண முஸ்லிம் கல்விப் பிரிவு பிரதிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எம். றிபாய் உட்பட அதிதிகள் பரிசில்களை வழங்கினர்.
7 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
15 Aug 2025