Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 29 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை விடுதலை செய்யக் கோரியும் அரசாங்கத்தின் கடும் போக்குகளை கண்டித்தும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை 5.30 மணியளவில் கண்டி நகரில் சுவரொட்டி போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
சர்வாதிகாரதிற்கு எதிரான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் நாடாளுமன்ற அங்கத்துவர்களான மங்கள சமரவீர, திஸ்ஸ அத்தநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல மாகாண சபை அங்கத்தவர்களான சாந்தினீ கோன்கஹகே, லகீ ஜயவர்தனா, செய்னுல் ஆப்தீன் லாபீர், எஸ்.எம்.பீ.டீ அல்விஸ், சித்ரா மன்திலக்க, சானக அய்லப்பெரும, கண்டி மேயர் ராஜா புஷ்பகுமார, முன்னாள் மேயர் எல்.பீ;.அலுவிகார, மாநகர சபை அங்கத்தவர் இலாகி ஆப்தீன் உட்பட பல உள்ளுராட்சி மன்ற அங்கத்தவர்களும்; கலந்து கொண்டனர்.
இவர்கள் கண்டி நகர வீதிகளில் கோஷங்களை எழுப்பி ஊர்வலமாகச் சென்றதுடன் சுவரொட்டிகளையும் ஒட்டி தமது கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இதில் முதலாவது சுவரொட்டியை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க ஒட்டி ஆரம்பித்து வைத்தார். ஊர்வலத்தில் சென்றவர்கள் பின்னர் மத வைபவங்களிளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
15 Aug 2025