2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அரசாங்கத்தின் மாற்றத்தையே அனைவரும் எதிர்பார்க்கின்றனர் - சஜுத்

Kogilavani   / 2010 நவம்பர் 22 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

நாங்கள் நாடு முழுதும் சென்று மக்களை சந்திக்கும்போது போது அனைத்து தரப்பினரும் அரசாங்கத்தின் மாற்றம் ஒன்றையே எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்றம் நாட்டில் வாழும் அனைவருக்கும் பலத்தை தரும் மாற்றமாக அமைய வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின்  ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கண்டி குண்டசாலை தேர்தல் தொகுதியில் நேற்று மாலை இடம் பெற்ற கிராமிய சுற்றுலா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இன்று இந் நாட்டில் வாழ்வது பெரும் சாவாலுக்குரியதாக உள்ளது. நாட்டின் அடிநிலை மட்டத்தில் வாழ்க்கை நடத்தபவர்கள் முதல் நடுத்தர அரச ஊழியர்கள் வரை அனைவரும் வாழ்க்கையில் போராட்டத்தினையே எதிர்கொள்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஒரு நிலையான வாழ்க்கையை உருவாக்கி கொடுப்பதே ஐக்கிய தேசிய கட்சியின் நோக்கமாகும்.

அதற்காக நாம் புதியதொரு ஐக்கிய தேசிய கட்சியை உருவாக்கி அதனூடாக அனைவருக்கும் பலத்தையும், சக்தியையும் தரும் ஒரு புது யுகத்தை உருவாக்குவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .