2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கொழும்பு – பதுளை ரயில் சேவை பாதிப்பு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 23 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம் தாஹிர்)

பதுளை - கொழும்புக்கு இடையிலான ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக புகையிரத பிரிவு தெரிவிக்கின்றது.

நேற்று முன்தினம் இரவு பெய்த கடும் மழைக்காரணமாக பண்டாரவளை பதுளை புகையிரத பாதையில் எல்ல, கிதல்எல்ல 167 மைல்கள் அருகில் மண்சரிவோடு பாரிய கல் ஒன்று இடிந்து விழுந்ததில் புகையிரதப்பாதைப் பாதை முற்றாக சேதமடைந்துள்ளது.

இதன் காரணமாக பதுளை கொழும்பு புகையிரத சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமை ஸ்தம்பித்தன. இன்று காலை பதுளையில் இருந்துப் புறப்பட இருந்த உடரட்டமெனிக்கே, மற்றும் பொடிமெனிக்கே புகையிரத வண்டிகள் பயணத்தை ஆரம்பிக்கவில்லை.

அத்தோடு கொழும்பிலிருந்து நேற்று இரவு பயணித்த புகைவண்டி பண்டாரவளையில் தரித்து நின்றது. இந்நிலையில் இன்று நண்பகல் வரை புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பவில்லை.

அனேகமாக புகையிரத தண்டவாலங்களை சீர்செய்ய இன்னும் (24) மணித்தியலங்களுக்கு மேல் செல்லலாம் என புகையிரத வட்டாரங்கள் தெரிவித்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .