2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வீதி விபத்தில் கல்லூரி அதிபர் பலி

Super User   / 2010 நவம்பர் 25 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி வத்துகாமம் பண்விலை வீதியில் நேற்று இரவு இடம் பெற்ற ஒரு வாகன விபத்தில் வத்துகாமம் மத்திய கல்லூரியின் அதிபர் கபில பண்டார உயிரிழந்துள்ளார்.

இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வத்துகாமம் பன்விலை வீதியில் வளைவு ஒன்றில் வைத்து மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு விலகியதால் அவர் கடுமையான காயங்களுக்குள்ளாகி மரணமாகியுள்ளார்.

53 வயதான கபில பண்டார  இலங்கை அதிபர்கள் சேவையைச் சேர்ந்த முதலாம் தர உத்தியோகத்தராவார்.

இவ்விபத்து சம்பந்தமாக வத்துகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்துகின்றனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .