2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

குறைந்த வருமானம் பெறுவோருக்கான கடன் வசதி

Kogilavani   / 2010 நவம்பர் 26 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)
நுவரெலியா ஹட்டன் நஷனல் வங்கி குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீடமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இன்று 50 பேருக்கான  கடன் உதவியை வழங்கியுள்ளது.

இக் கடன் திட்டமானது ஜக்கிய மக்கள் நலன்புரி சங்கத்தினதும், அரசசார்பற்ற நிறுவனமான ' லெப்சஸ்'  நிறுவனத்தினதும் மேற்பார்வையின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.  

இத் திட்டத்திற்காக நுவரெலியா ஹட்டன் நஷனல் வங்கியினால் 55 இலட்ச ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இக் கடன் உதவியினை பெற்றுக் கொண்ட முதல் தொகுதியினர் முறையாக இதனை வங்கிக்கு செலுத்தும் பட்சத்தில் இத் திட்டம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .