2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காட்டுப் பன்றிக்கு வைத்த மின்பொறியில் சிக்கி ஒருவர் மரணம்

Kogilavani   / 2010 நவம்பர் 26 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யஹலதென்னை பிரதேசத்தில் காட்டுப் பன்றிக்கு வைத்த சட்டவிரோதமான மின்சார பொறியில் சிக்கி 24 வயது  இளைஞர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

குமார பீரிஸ் என்ற இளைஞனே இவ்வாரு உயிரிழந்தவர் ஆவார்.

இப்பிரதேசங்களில் காட்டுப் பன்றிகளின் தொல்லை அதிகரித்து வருவதன் காரணத்தாலும் ஒரு வருமான வழியாகவும் சிலர் இவ்வாறான சட்டவிரோத மின் கம்பிகள் மூலம் பன்றிகளை பிடிப்பதற்கு முற்படுகின்றனர்.

இதற்காக வைக்கப்பட்ட பொறியில் சிக்கியே இவ் இளைஞர் பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தொட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .