2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தாயினால் கைவிடப்பட்ட சிறுவன் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

Kogilavani   / 2010 நவம்பர் 26 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

பொகவந்தலாவை பகுதியில் தாயினால் கைவிடப்பட்ட நிலையிலிருந்த 11 வயது சிறுவனொருவனை பொதுமக்கள் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை மாலை  6.00 மணியளவில்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

குருநாகல் பிரதேசத்தைச்சேர்ந்த அச்சிறுவனிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது  குறித்த சிறுவன் வெல்லவ என்றும் இடத்தை சேர்ந்தவரென்றும்,  குருநாகல் பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்ததுடன் சிறிய வயதிலேயே தனது தந்தையை பறிகொடுத்தவரென்றும் தெரியவந்தாக நோர்வூட் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் குமார கருத்து தெரிவித்தார்.

இச்சிறுவன் கடந்த 22ஆம் திகதி பொகவந்தலாவையில் உள்ள தமது உறவினர் வீட்டிற்கு சென்று தனது தாயாருடன் குருணாகல் நோக்கி திரும்பும் வேளையில் தனது தாயை தவறவிட்டுள்ளார். கடந்த ஐந்து நாட்களை பழைய லொறி ஒன்றில் கழித்த சிறுவன், மீண்டும் ஹட்டன் நோக்கி பஸ்ஸில் வரும்போது சிறுவனை பஸ் நடத்துனர்  ஒருவர் இனங்கண்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

இச்சிறுவனை இன்று ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அச்சிறுவனை சிறுவர் நன்னடத்தை அதிகார சபையிடம் ஒப்படைப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .