2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பிரதியமைச்சர் காதருக்கு கம்பளை நகரில் வரவேற்பு

Super User   / 2010 நவம்பர் 28 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்எம்.எம்.ரம்ஸீன்)

சுற்றாடற்துறை பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.அப்துல் காதருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கம்பளை நகரில் பொதுமக்களால் வரவேற்பளிக்கப்பட்டது.

கம்பளை நகரில் மணிக்கூட்டு கோபுர சந்தியில் பிரதியமைச்சர் பொதுமக்களால் வரவேற்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து கம்பளை அம்பகமுவ வீதியில் அமைந்துள்ள பிரதியமைச்சரின் இல்லத்தில் பிரதியமைச்சர் ஏ.ஆர். எம்.அப்துல் காதர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியினர் நாட்டின் நன்மை கருதி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதுடன் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டும்.

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் அரசாங்கம் சகல உள்ளுராட்சி மன்றங்களையும் கைப்பற்றும்.  
நான் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்தாலும் ஆளும் அரசாங்கத்துடன் இருந்தாலும் மக்கள் என்னுடன் உள்ளனர் என்பதை இங்கு குழுமியிருக்கும் மக்கள் கூட்டம் தெளிவாகக் காட்டுகின்றது என்றார்.




 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .