2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி, பலர் காயம்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 01 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)

நுவரெலியா பொலிஸ் நிலையத்தினுள் சற்றுமுன்னர் குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் பலியானதுடன் 12 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்துள்ளனர்.

கதிர்காமம் கட்டுகமுவயிலிருந்து பஸ்ஸில் பயணம் செய்தபோது கஞ்சா விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவர் நுவரெலிய பொலிஸ் நிலையத்தில் குண்டை வெடிக்கச் செய்ததாக  தெரிவிக்கப்படுகிறது.

இதில் மேற்படி சந்தேக நபர் பலியானதுடன் அங்கிருந்த 12 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .