2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் மருத்துவமனையில்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 02 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)

நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

மாத்தளையை சேர்ந்த அத்துல தம்மித் (வயது 32) என்று முன்னாள் இராணுவ வீரர் கஞ்சா பொதியுடன் நுவரெலியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டார். இந்நபர் மீது ஏற்கனவே 13இற்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இராணுவத்திலிருந்து தப்பி வந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டமையால் கைதுசெய்து சிறையில் அடைத்திருந்தனர். சிறையிலிருந்தும் இந்நபர் லாவகமாக தப்பிச் சென்றிருந்தார். இப்படியாக பல குற்றச்சாட்டுகளுக்குள்ளான குறித்த நபரை விசாரணைக்கு உட்படுத்தியவேளையிலேயே தன்னிடமிருந்த கைக்குண்டினை வெடிக்க வைத்திருந்தார்.

இவ்வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த உயர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட பொதுமக்கள் சிலரும் தொடர்ந்து நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மரணமடைந்தவரின் பிரேத பரிசோதனைகள் தற்சமயம் நடைபெற்றுவருவதுடன் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X