Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 02 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
2011ஆம் ஆண்டுக்கான நாவலப்பிட்டி நகரசபையின் வரவு, செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய அபிவிருத்தித்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகள் பெற்றுக்கொள்வதற்கான விசேட கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை நாவலப்பிட்டி நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
நாவலப்பிட்டி நகரசபைத் தலைவர் நிஸாந்த ரணசிங்க தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நகரசபை உறுப்பினர்கள், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராம உத்தியோகஸ்தர்கள், சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள், பொதுசுகாதார பிரிவினர்கள், வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள், கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, நாவலப்பிட்டி நகரசபையின் மூலம் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர். அத்துடன், எதிர்காலத்தில்; மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
நாவலப்பிட்டி நகரசபை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் ஆலோசனைக்கமைய, நாவலப்பிட்டியில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் பல்வேறு வகையில் அபிவிருத்தி அடைந்து வருவதாகவும் இந்த அபிவிருத்தித்திட்டங்களின் மூலமாக நாவலப்பிட்டி பிரதேசத்தைச் ;சேர்ந்த மக்கள் பல்வேறு வகையில் நன்மை பெற்றுவருவதாகவும் 2012ஆம் ஆண்டளவில் இலங்கையின் மிகச்சிறந்த நகரசபையாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த நகரசபையின் எதிர்கால அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதென்றும் நாவலப்பிட்டி நகரசபைத்தலைவர் நிசாந்த ரணசிங்கஹ தெரிவித்தார்.
5 hours ago
9 hours ago
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
16 Aug 2025