2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கற்பாறை விழுந்ததால் வயோதிபப் பெண் ஸ்தலத்திலேயே பலி

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி கட்டுகஸ்தோட்டை இனிகலை என்னுமிடத்தில் வீடு ஒன்றின் மீது மண் கலந்த கற்பாறை விழுந்ததனால் 72 வயதுப் பெண் ஒருவர் அவ்விடத்திலேயே உயிரிந்துள்ளார்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டின்மீது இம்மண் உள்ளிட்ட கற்பாறை விழுந்துள்ளது. இதன்போது உயிரிழந்தவர் அப்துல் மஜீட் தாயிம் நோனா என்ற பெண் ஆவார்.

இவருடன் வீட்டில் இருந்த இவரது உறவினர்கள் மயிரிழைவில் உயிர் தப்பியுள்ளனர்.

இப்பிரதேசத்தில் மேலும் நான்கு வீடுகள் அபாய நிலையில் உள்ளதாகவும் அவ்வீடுகளில் வசிப்பவர்களை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதேச கிராம அதிகாரி ஆர்.எம்.கெமுனு தெரிவித்தார்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்துகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .