Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 06 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
இலங்கை மின்சார சபையின் தற்காலிக மற்றும் ஒப்பந்த முறைப்படி வேலை செய்கின்ற தம்மை உடன் நிரந்தர சேவையில் சேர்க்குமாறு கோரி இலங்கை மின்சார சபையின் கண்டி பிரதான காரியாலய கூரை மேல் ஏறி உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் ஊழியர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் பிரயோகித்ததனால் பதற்றநிலை ஏற்பட்டது.
இலங்கை மின்சார சபையில் மத்திய மாகாணம் முழுதும் ஒப்பந்த முறைப்படியும் தற்காலிகமாகவும் சேவை செய்யும் ஊழியர்கள் சுமார் 400 பேர் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்களில் சிலர் கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று இரவு 7.00 மணி அளவில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் போராட்டத்தை கைவிடுமாறு கோரிய போதும் இதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளாததன் காரணத்தால் கண்ணீர் புகை மற்றும் நீர் பீரங்கிகளால் பிரயோகம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டக்காரர்களில் இருவர் காயமடைந்து சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பதற்றநிலை ஏற்பட்ட போதும் போராட்டகாரர்கள் தொடர்ந்தும் தமது போராட்டத்தை நடாத்தி வருகின்றனர்.
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025
ameer Tuesday, 07 December 2010 04:47 PM
இது ஜனநாயக இராணுவ ஆட்சி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025