2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஹாலிஎல பிரதேசத்தில் பசும் பால் உற்பத்தி வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹீர்)

கிராமப்புறத்தில் வேலையற்ற பெண்களை சுயதொழில் முயற்சியில் ஈடுபடுத்தும் முகமாகவும், கிராமப்புற  சிறுவர்களின் போஷக்கு மட்டத்தை உயர்த்தும் முகமாகவும் பதுளை ஹாலிஎல பிரதேசத்தில் பசும் பால் உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனிய அரசாங்கத்தின் அனுசரணையில், ஊவா விவசாயிகள் அமைப்பு  இவ் பசும் பால் உற்பத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்துவைத்துள்ளது.

இந்நிகழ்வுக்கு இலங்கைக்கான ஜேர்மனிய நாட்டின் உயர்ஸ்தானிகர் ஜேன்ஸ் பிளேட்னர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்நிகழ்வு ஊவா விவசாயிகள் அபிவிருத்தி அமைப்பின் தலைவர் பிரேமதாச போதிநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பிரதேச பெண்கள், பாடசாலை மாணவர்கள், முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .