2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஹட்டனில் இலங்கை திறந்த பல்கலை பிராந்திய கிளைக் கட்டிட நிர்மாணப்பணி

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 13 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் கால்நடை அபிவிருத்தி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கேற்ப ஹட்டனில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின்  பிராந்திய கிளைக் கட்டிட நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பிரிவு உதவிச் செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்திரபோஸ் தலைமையிலான குழுவினர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் சந்தித்து இது தொடர்பாக  கலந்துரையாடினர்.

மலையக மாணவர்களின் உயர் கல்வியை கருத்திற் கொண்டும் எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையானவர்களுக்கு உயர்கல்வியை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கோடும் ஹட்டனில் திறந்த பல்கலைக்கழகத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள காணியில் கட்டிடங்களை நிர்மாணிக்கும் ஆரம்ப வேலைகளுக்காக 5 மில்லியன் ரூபாவை உடனடியாக வழங்குவதற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தேவையான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளார் என்று  அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .