2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கிறிஸ்மஸ், புதுவருட கொண்டாட்டங்களை முன்னிட்டு மலையகத்தில் விசேட பாதுகாப்பு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 23 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.எம்.ரிஃபாத்)

கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட கொண்டாட்டங்களை முன்னிட்டு மலையகத்தின் பல இடங்களில் பொலிஸ் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கண்டி, மாத்தளை, நுவரெலியா உள்ளிட்ட சில பிரதேசங்களிலேயே இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் ரோந்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக மேற்படி அலுவலகம் கூறியது.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி மேற்கொள்ளப்படவுள்ள இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 7ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என்றும் அவ்வலுவலகம் குறிப்பிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X