Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 டிசெம்பர் 23 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.எம்.ரிஃபாத்)
கொடுத்த கடனை திரும்பக் கேட்டவரின் மீது கொதிநீரை ஊற்றிய கொடூர சம்பவமொன்று லுணுகலை, ஹோப்டன் தோட்டத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் மற்றுமொரு நபரிடமிருந்து ஒரு தொகைப் பணத்தைக் கடனுதவியாகப் பெற்றுள்ளார்.
பல மாதங்கள் கடந்த நிலையில் அந்தக் கடனை திருப்பிச் செலுத்தாமையினால் பணத்தைக் கொடுத்த நபர் மேற்படி தொழிலாளியின் வீட்டுக்குச் சென்று கடனை திரும்பத் தருமாறு கோரியுள்ளார்.
இதன்போது இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து கோபமடைந்துள்ள தொழிலாளி - கொதிநீரை எடுத்து வந்து கடன் வழங்கியவர் மீது ஊற்றியுள்ளார். இதனால் காயங்களுக்குள்ளான அவர் அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவத்தை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரான தொழிலாளியைக் கைது செய்ததுடன் சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
51 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago