2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பூஜாப்பிட்டிய பிரதேச சபைக்கான வரவு செலவு திட்டம் நிரைவேற்றம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 23 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி, பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் 2011ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நிரைவேற்றப்பட்டது. பிரதேச சபையின் தலைவர் அனுர ஹேமன்த விஜேரத்ன இன்று காலை இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் 2011ஆம்  வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தினை சமர்பித்தார்.

ஆதன் படி 2011ஆம் ஆண்டின் மொத்த வருமானம் 10,99,80,800.00 (109.9808 மில்லியன்) ரூபாவாகவும் 2011ஆம் அண்டுக்கான மொத்த செலவு 10,96,49,620.00 (109.64962 மில்லியன்) ரூபாய்கள் ஆகும்.

இங்கு உரை நிகழ்த்திய எதிர்கட்சி தலைவர் எஸ்.எம்.கலீல் இவ்வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு பெரும் சுமைகளை சுமத்திவுள்ளதாகவும் வரி அதிகரிப்பின் மூலம் மக்களை அவதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.  இருந்த போதும் இவ்வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பது பயனளிக்காதது என்பதால் இதனை எதிர்க்கவில்லை என்றும் கூறினார்.

மக்கள் விடுதலை முன்னனியின் உறுப்பினர் விஜயலத் பீ. தென்னகோன் உரை நிகழ்த்தும் போது மக்களை வாட்டி வதைத்துள்ள இவ்வரவு செலவுத்திட்டத்தக்கு ஆதரவு வழங்குவது என்பது பொது மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் செயலாகும் என்பதால் இதனை எதிர்ப்பதாகவும் கூறினார். ஜே.வீ.பீ. அங்கத்தவரின் எதிர்ப்புக்கு மத்தியில் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X