2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தனியார் நிறுவன முகவர் என்று கூறி தங்க நகைகளைத் திருடிய நபர் கைது

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 24 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

தனியார் நிறுவன முகவர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு  வீடுகளிலுள்ள தங்க நகைகள் மற்றும் உபகரணங்களை திருடிய சந்தேக நபர் ஒருவரை மாத்தளை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
 
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தளை நீதிமன்றம் முன் ஆஜர் செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்க மறியளில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மாத்தளை, வத்துகாமம், உக்குவளை ஆகிய பிரதேசங்களிலுள்ள வீடுகளுக்கு சென்று ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெருமதியுள்ள பொருட்களை இவர் திருடியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்தள்ளது.

கண்டி, ஜம்புகஹபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இச்சந்தேக நபர் உக்குவளை பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருக்கும் போது பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X