Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 26 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
பெரும்பான்மை சமூகத்துக்கு மத்தியில் சிறுபான்மையினர் வாழ்வது எப்படி என்பதை ஆழமாக ஆராய்வதற்காக சர்வதேச மட்டத்தில் இஸ்லாமிய கருத்தரங்கொன்றை நடத்துவதற்கு நீதியமைச்சு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார் .
கண்டி மடவளை மதீனா தேசிய பாடசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அஹதியா பாடசாலையின் 10ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
எமது நாட்டிலுள்ள முஸ்லிம் மாணவர்களுடைய மார்க்க அறிவை வளர்ப்பதற்கு அஹதியா பாடசாலைகள் பெரும் பங்காற்றுகின்றது. அரசாங்கப் பாடசாலைகளுக்கு மௌலவி ஆசிரியர்களை நியமிப்பதற்கான வேண்டுகோள் தொடர்ந்து விடுக்கப்படுகின்றது. ஆனாலும், அரசாங்கம் 100 மௌலவி ஆசிரியர்களை நியமித்துள்ளது. இன்னும் 300 ஆசிரியர்களாவது நியமிக்கப்பட வேண்டும்.
பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மாணவர்கள் முஸ்லிம் அல்லாத பாடசாலைகளில்; கல்வி கற்கின்றனர். எனது இரண்டு பிள்ளைகளும் இலங்கையின் பிரபல பௌத்த பாடசாலையொன்றிலேயே கல்வி கற்கின்றனர். அவர்களும்; மார்க்க அறிவை பெற்றுக்கொள்வதற்காக அஹதியா பாடசாலைக்கே அனுப்புகிறேன் என்றார்.
இதன்போது, இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
54 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago