2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் தன்னியக்க வான் கதவுகள் திறப்பு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 28 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மலையகத்திள் பெய்து வரும் கடும் மழை காரணமாக விக்டோரியா நீர்த் தேக்கத்தின் இரண்டு தன்னியக்க வான் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு சில தினங்களுக்கு முன் விக்டோரியா நீர்த் தேக்கத்தின் தன்னியக்க கதவுகள் திறக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவை மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் கடும் மழை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரண்டு தன்னியக்க கதவுகள் திறக்கப்பட்டுள்ளதை தவிர நாட்டின் மற்றும் பல நீர்த தேக்கங்களில் வான் கதவுகள்  திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவை சேர்ந்த எட்டு குடும்பங்களை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்தவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X