2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வலப்பனை தோட்டங்களுக்கு வளப்பகிர்வு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 29 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமாரின் பன்முகப்பட்டுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம், வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகளின் சிறு அபிவிருத்தித்திட்டங்களுக்காகப் பெறப்பட்டுள்ள பொருட்களை  நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப வலப்பனை பிரதேசத்தைச்சேர்ந்த 8 தோட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் பொருட்களைப் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வொன்று வலப்பனை பிரதேசசபை வளாகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


இந்நிகழ்வில், வலப்பனை பிரதேசசபையின் செயலாளர் லலிதாவெண்டோல் வலப்பனை பிரதேசசபை உறுப்பினர்களான பி.சண்முகம். எஸ்.ஜெயசீலன், மத்திய மாகாணசபை உறுப்பினர் எம்.உதயகுமாரின் இணைப்பாளர் நவா மற்றும் தோட்டத்தலைவர்களும் கலந்துகொண்டனர். கொங்கோடியா, ஹைபொரஸ்ட், சென்ஜோன்ஸ், டெல்மார், ராகலை, மஹாஊவா, ஓல்டிமார், டலஸ், கோடன் ஆகிய தோட்டங்களின் சிறு அபிவிருத்திக்கான பொருட்கள் இந்நிகழ்வின்போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X