2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மஹாவலி கங்கையிலிருந்து வயோதிப மாதுவின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 29 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

இரண்டு தினங்களுக்கு முன்னர்  காணாமல்ப்போன வயோதிப மாதுவின் சடலம் மஹாவலி கங்கையிலிருந்து கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


கண்டி தெய்யன்னேவெல பிரதேசத்திலிருத்து வெற்றிலை வாங்குவதற்காக அயலிலுள்ள கடைக்கு சென்றுள்ள 78 வயதான இம்மாது, சிறிய ஓடையொன்றில் விழுந்த நிலையில் மஹாவலி ஆற்றுக்கு அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இம்மரணம் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை கண்டி திடீர் மரண விசாரனை அதிகாரி சுபுன் மாபலகம மரண விசாரணை நடத்தியதுடன், கண்டி வைத்திய அதிகாரி எச்.சீ.விஜேசிங்க பிரேத பரிசோதனையை நடத்தினார். நீரிழ் மூழ்கியதால் இம்மரணம் சம்பவித்ததாக தீர்ப்பளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X