2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

உலக மரபுரிமை பிரதேசங்களாக நக்கில்ஸ் மலைத்தொடர், ஹோட்டன் தென்ன, சிவனொளிபாதமலை

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 29 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மத்திய மலை நாட்டிலுள்ள இயற்கை எழிழ் மிகுந்த பிரதேசங்களான நக்கில்ஸ் மலைத்தொடர், ஹோட்டன் தென்ன, சிவனொளிபாதமலை ஆகிய மூன்று பிரதேசங்களையும் உத்தியோகபூர்வமாக உலக மரபுரிமை பிரதேசங்களாக ஏற்றுக்கொண்டுள்ளதாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.


அண்மையில் பிரேஸில் நகரில் நடைபெற்ற 34ஆவது உலக மரபுரிமை அமைப்பின் மாநாட்டில், இம்மூன்று பிரதேசங்களும் உலக மரபுரிமை பிரதேசங்களாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று சுற்றாடல்த்துறை அமைச்சு கேட்டுக்கொண்டதற்கமைய அது கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


இதற்கான  உத்தியோகபூர்வ கடிதத்தை யுனெஸ்கோ நிறுவனம் தற்போது இலங்கைக்கு வழங்கியுள்ளது. இத்துடன் இலங்கையின் மரபுரிமை பிரதேசங்கள் எட்டாக அதிகரித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X