2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

காட்டுக்கு விறகு சேகரிக்க சென்ற முதியவரை காணவில்லை

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 29 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

மஸ்கெலியா, சாமிமலை ஸ்டெஸ்பி தோட்டத்தைச் சேர்ந்த முதியவரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை  காலை 9 மணியளவில் விறகு சேகரிப்பதற்காக காட்டுக்கு சென்ற நிலையில், இரவாகியும் வீடு திரும்பாததால் அவரைத் தேடும் பணியில் தோட்ட மக்கள் ஈடுபட்டுள்ளனர்.


ஸ்டெஸ்பி தோட்டத்தில் ஓய்வுபெற்ற தொழிலாளியான பொன்னையா என்ற 60 வயதான முதியவரே இவ்வாறு காட்டிற்கு விறகுச் சேகரிப்பதற்காக சென்றபோது காணாமல் போயுள்ளார்.


நேற்று இவர் காட்டுக்கு விறகு சேகரிக்கச்சென்றதைப் பலரும் கண்டுள்ளனர். தோட்ட மக்கள் வேலைக்குச் செல்லாது காட்டுப்பகுதிக்குச் சென்று முதியவரைத் தேடும் பணியில்; ஈடுபட்டுள்ளனர்;. இந்தச்சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக ஸ்டெஸ்பி தோட்டத்தின் உதவி தோட்ட அதிகாரி சான்குரே தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X