2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பதுளையில் இலவச வைத்திய கிசிச்சை முகாம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 29 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சமூக நலன் அபிவிருத்தி அமைச்சும் பதுளை ரொடரி கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த இலவச வைத்திய கிசிச்சை முகாம் இன்று புதன்கிழமை காலை பதுளை தர்மதூத கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த இலவச சிகிச்சை முகாமில் இந்திய சென்னை காமாட்சி வைத்தியசாலை வைத்திய நிபுணர் குழுவினரும் பதுளை பொதுவைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர்களும் சேவைகளை வழங்கினர்.

இந்த வைத்திய சிகிச்சை முகாம் நாளையும் பதுளையில் இடம்பெறவுள்ளது.  பதுளைக்கு வந்த இந்திய சென்னை காமாட்சி வைத்தியசாலை வைத்திய நிபுணர் குழுவை, பதுளை மாவட்ட அரச அதிபர் ரோஹன கீர்த்தி திஸாநாயக, அமைச்சர் டிலான் பெரேராவின் தாயார் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகத்தர்கள் பதுளை தர்மதூத கல்லூரிக்கு அருகாமையில் வைத்து வரவேற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X