2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கார் கவிழ்ந்ததில் மூவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 29 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம். தாஹிர்)

பதுளை - கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளை, பெரகல 5 ஆவது மைல் கல் அருகில் காரொன்று கவிழ்ந்ததில்; காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் ஹப்புத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பதுளை பிரதேசத்தை சேர்ந்தவர்களே காயமடைந்தவர்களென்பதுடன், காயமடைந்தவர்களில் சிறுவனொருவனும், பெண்ணொருவரும் அடங்குவதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்த மோட்டார் காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X