2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சிறுமியிடம் பாலியல் சேஷ்டை புரிய முற்பட்ட இளைஞனுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 29 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

பொகவந்தலாவைப் பிரதேச தோட்டமொன்றில் 12 வயது சிறுமியிடம் பாலியல் சேஷ்டை; செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
குறி;த்த இளைஞன் ஹட்டன் நீதிமன்றத்தில்  இன்று புதன்கிழமை  ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே, அவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் பொகவந்தலாவை பிரதேச தோட்டத்தைச் சேர்ந்த 22 வயதான இவ் இளைஞன்,  அதே தோட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியிடம் அவரது பெற்றோர் அழைப்பதாகக் கூறி மறைவிடமொன்றுக்கு  அழைத்துச் சென்றுள்ளார்.


இந்த இளைஞனின் செயலைக் கண்ட ஒரு சிலர் உடனடியாக அந்தச் சிறுமியை காப்பாற்றியுள்ளனர். அத்துடன், அந்த இளைஞனைப் பிடித்து பொகவந்தலாவை பொலிஸாரிடம் ஒப்படைத்துனர்.  இதன் பின்பு குறிப்பிட்ட சிறுமியை அவர்களின் பெற்றோர் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர். இந்தச்சிறுமி எந்தவிதமான துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்படவில்லை என்று பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஜெயசூரிய தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X