2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக மாடுகளை கொண்டு சென்ற சந்தேக நபர்கள் கைது

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 31 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

சட்டவிரோதமாக லொறியொன்றில் கொண்டு செல்லப்பட்ட 24 மாடுகளை இன்று வெள்ளிக்கிழமை காலை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபர்களையும் தம்புள்ளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


பொலன்னறுவை மாவட்டத்தில் சுதந்திரமாக நடமாடித் திரிந்த மாடுகளை பிடித்துச்சென்று கொழும்பில் விற்பனை செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இம்மாடுகளுடன் கைதுசெய்யப்பட்ட 5 சந்தேக நபர்களில் மூவர் தப்பியோடியதாகவும் அவர்களை மீண்டும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டு பொலிஸாரின் பாதுகாப்பிலுள்ள இரு  சந்தேக நபர்களையும் இன்று தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X