2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 31 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)
 
மஹியங்கனை பிரதேசத்திலிருந்து கண்டி பிரதேசத்துக்கு பெருமளவில் கஞ்சா விநியோகிக்கும் சந்தேக நபர் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் ஆறரை  கிலோ கஞ்சாவுடன்; நேற்று வியாழக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

கண்டி - குருணாகலை வீதியில் அலதெனிய என்னும் இடத்தில் சந்தேகத்தின் பேரில் இவரை கைதுசெய்து விசாரணை நடத்திய பொலிஸார், அவரிடமிருந்து ஒரு  கிலோ கஞ்சாவை  மீட்டுள்ளனர்.  மேலும் மஹியங்கனை வீட்டில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஐந்தரை   கிலோ கஞ்சாவையும்  பொலிஸார். மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X