2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மலையகத்தில் புதுவருட பூஜைகள்

Super User   / 2011 ஜனவரி 01 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

இன்றை புதுவருட பிறப்பினை முன்னிட்டு மலையகத்திலுள்ள வணக்கஸ்தலங்களில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.

நாவலப்பிட்டி நகரிலுள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் மற்றும் ஸ்ரீ முத்து மாரியம்பாள் ஆலயத்திலும் இன்று காலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நாவலப்பிட்டி நகரிலுள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் நாவலப்பிட்டி நகர சபை தலைவர் நிசாந்த ரணசிங்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாவலப்பிட்டி ஸ்ரீ முத்து மாரியம்பாள் ஆலயத்தில் இவ்வாலயத்தின் குருக்களான திவாகர் தலைமையில் பூஜைகள் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X