Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஜனவரி 03 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ,எஸ்.தியாகு)
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான அமரர் சந்திரசேகரனின் அரசில் பயணமானது ஆரம்பத்திலிருந்து போராட்டங்களோடும் சிறைவாசத்தோடும் சம்பந்தப்பட்டதாவே அமைந்திருந்தது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவி திருமதி சாந்தினிதேவி சந்திரசேகரன் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாப தலைவர் பெ.சந்திரசேகரனின் முதலாவது சிரார்த்தத் தின அஞ்சலிக்கூட்டம் நேற்று 2ஆம் திகதி தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலய கலாசார மண்டபத்தில் இடம்பெற்றபோது இந்தக் கூட்டத்திற்கு தலைமை ஏற்றுப் பேசியபோதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தக்கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவுத் தலைவர் வி.இராதாகிருஸ்ணன், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவி திருமதி சாந்தினிதேவி சந்திரசேகரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:
அமரர் சந்திரசேகரனின் வாழ்க்கை துணையாக வாழ்ந்த காலம் முதல் அவரது அரசியலில் நான் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் அவரது போராட்டங்களினதும் துன்பங்களினதும் கடுமையை நான் அறிந்துள்ளேன். ஆனாலும் கூட எந்தவிதத்திலுமே அவரது அரசியலுக்கு எமது குடும்பம் என்றுமே தடையாக இருந்தது இல்லை.
பண்டாரவளை பிந்துனவௌ சம்பவத்தையொட்டிய போராட்டங்களின்போது அவர் உயிருடன் திரும்புவாரோ என்ற பயம் கூட எங்களுக்கு ஏற்பட்டது. அவர் தனது உயிரைப் பணயம் வைத்துத்தான் பல்வேறு அரசியல் போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
இந்த நிலையில் அவர் மறைந்து ஒரு வருட நினைவு தினத்தினத்தில் பல்வேறு தோட்டங்களையும் சேர்ந்த முன்னணியின் ஆதரவாளர்கள் தாமாகவே முன்வந்து அஞ்சலி கூட்டங்களையும் பூஜைகளையும் நடாத்தி வருகின்றனர். இதனையிட்டு நான் பெருமையடைகின்றேன். அவர் மீது மக்கள் வைத்துள்ள நேசம் என்றுமே குறையப்போவதில்லை. அவரின் பணியை முன்னெடுப்பதற்காகத்தான் எனது குடும்பச் சுமையையும் தாண்டி முன்னணியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ளேன் என்று குறிப்பிட்டார்.
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago