2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஐ.நா திட்டத்தை அமுல்படுத்த தோட்ட தொழிலாளர் சமூக அமைப்பு கோரிக்கை

Menaka Mookandi   / 2011 ஜனவரி 03 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக தமிழ் மக்களின் வாழ்வை முன்னேற்றுவதற்கும் அவர்களுடைய உரிமைகளை பாதுகாப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபை முன்வைத்துள்ள திட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என தோட்ட தொழிலாளர் சமூக அமைப்பு கூறுகின்றது.

நேற்று கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற இவ்வமைப்பின் ஒன்று கூடல் ஒன்றின் போதே இப்பிரேரணை முன்வைக்கப்பட்டதாக இதன் இணைப்பு அதிகாரி எஸ்.முருகையா கூறினார்.

தோட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்த ஊதியம் ஒன்றினை வழங்குவதற்கும் ஐ.நா சபை சிபாரிசு செய்துள்ளதாகவும்  இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

1948ஆம் அண்டு இலங்கை குடி உரிமைச் சட்டத்தினை ரத்து செய்யுமாறு அரசிடம் கேட்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X