2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கால்நடைகளுக்கு புதிய வாகனம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 07 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கால்நடைகளை இடத்துக்கு இடம் கொண்டு செல்வதற்காக  பேராதனையிலுள்ள கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் புதியதொரு வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து கால்நடைகள் வேறிடங்களுக்கு கொண்டு செல்லும்போது, அவைகள் சிரமத்திற்குள்ளாகின்றன. இந்நிலையிலேயே, கால்நடைகளை கொண்டு செல்வதற்காக  புதியதொரு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி திணைக்களம் தெரிவித்தது.

திணைக்களம் புதிதாக அறிமுகம் செய்துள்ள இவ்வாகனம் கால்நடைகளுக்கு பொருத்தமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வாகனங்களைத் தவிர, வேறு வாகனங்களில் கால்நடைகள் கொண்டு செல்லப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் கால்நடை உற்பத்தி திணைக்களம் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X