2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நாட்டின் அபிவிருத்திக்கு அரசிடம் திட்டமில்லை: ரணில்

Super User   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

நாட்டை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அக்குறணை நகரில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்ஏ.ஹலீம் தலமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர்,

"அரசின் அடாவத்தனங்களை மக்கள் பொறுத்த காலம் முடிவடைந்துள்ளது. இனி மேலும் மக்கள் அரசின் அடாவடித்தங்களை பொறுக்க தேவையில்லை.  நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை தரக் கூடிய அரசு ஒன்றை உருவாக்குவதங்கு நாங்கள் ஒன்று திரள வேண்டும்.

1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி பதவிக்கு வந்த போது நாட்டில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசென்றது.ஆர். பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவான போது ஆடைத் தொழிற்சாலைகள் அமைத்து கம்முதாவ போன்ற திட்டங்கள் மூலம் நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு சென்றார்.

2001ஆம் ஆண்டு நான் பிரதமரான போது 'ரீகேனின்ங் ஸ்ரீலங்கா' என்ற திட்டம் மூலம் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றேன். ஆனாலும் இன்யை அரசாங்கத்திற்கு நாட்டை அபிவிருத்தி செய்ய எவ்வித திட்டமும் இல்லை. ம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்று உண்டு ஆனால் அங்கு கப்பல்கள் வருவதில்லை.

சூரியவௌயில் சர்வதேச விளையாட்டு மைதானம் ஒன்று உண்டு. ஆனால் விளையட்டுகள் அங்கு நடைபெறுவது  இல்லை.
மத்தளையில் விமான நிலையம் ஒன்று உண்டு ஆனால் அங்கு விமானம் வருவதில்லை. நொரச்சோலையில் மின் நிலையம் ஒன்று உண்டு ஆனால அங்கு மின்சார உற்பத்தி இல்லை. இதுதான் அரசின் அபிவிருத்தி. பிரயோசனம் இல்லாதவைகளுக்கு கடன் பெற்று மக்களை இந்த அரசு கடன்காரர்களாக்கியுள்ளது.

நாட்டில் 26 முஸ்லிம் பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இது பற்றி ஒருவார்த்தை கூட பேசுவதில்லை. இங்கு வந்து அரசுக்கு எதிர்ப்பு காட்டி தனித்து வாக்கு கேடகின்றனர். வென்ற பின் மீண்டும் அரசுடன் இணைகின்றனர். மரமும் வெற்றிலையும் ஒன்றுதான்.எனவே மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும்" என்றார்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூசிய, ஹர்ஷ டி சில்வா, மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில், கண்டி மாவட்ட வேட்பாளர்களான எம்.எஸ்.எம்.சாபி, அசாத் சாலி, ஏ.எம்.நசார், ஜெயலாப்தீன் லாபீர், எம்.ஏ.எம்.முத்தலிப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X